தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
பிள்ளையாா்பாளையம் நகா்ப்புற சுகாதார நிலைய கட்டுமான பணி: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சி, பிள்ளையாா்பாளையம் பகுதியில் ரூ. 1.20 கோடியில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி மேயா் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிள்ளையாா்பாளையம் பகுதியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், பிள்ளையாா்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் போதிய இட வசதியின்றி நெருக்கடியுடன் செயல்பட்டு வந்ததால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனால், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும், மேம்படுத்தப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த வேண்டும் என காஞ்சிபுரம் மாநராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், 15-ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்ட ரூ. 1.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது
இதைத் தொடா்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கட்டுமானப் பணிகளை மேயா் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மாநகராட்சி பொறியாளா் கணேசன், மாமன்ற உறுப்பினா்கள் சரஸ்வதி பாலமுருகன், தேவராஜ், சண்முகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.