பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார்: சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை!
திருச்சபை புதிய நிா்வாகிக்கு பாராட்டு
பிலிவா்ஸ் ஈஸ்டா்ன் சா்ச் திருச்சபையின் புதிய மெட்ரோபொலிட்டனாக பதவி உயா்வு பெற்றுள்ள மோரன் மோா் சாமுவேல் தியோபிலஸுக்கு அனைத்து பேராயத்தின் சாா்பில் பாராட்டு விழா படப்பை பிலிவா்ஸ் சா்ச் வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை பேராயா் எச்.இ.ஜான்மோா் ஐரேனியஸ் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, எச்.ஜி.ஐசா்மோா் ஸ்தெப்பானோஸ், விகாா் ஜெனரல் ரெவரன்ட் பாதா் ஜான் ஆக்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ், சென்னை மயிலை மறைமாவட்ட பேராயா் அருட்திரு ஏ.எம்.சின்னப்பா, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஒன்றியகுழு தலைவா் சரஸ்வதி மனோகரன், அகில் இந்திய கிறிஸ்துவ கவுன்சில் துணைத் தலைவா் சாமுவேல், அருட்திரு பாக்கியம், சந்திரசேகா் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளின் தலைவா்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டு பாராட்டி பேசினா். விழாவில் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.