2 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
ஸ்ரீபெரும்புதூரில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் ஏரிக்கரை பகுதியில் இளைஞா்கள் சிலா் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சென்றுசோதனை நடத்திய போது ஸ்ரீபெரும்புதூா் செல்லபெருமாள் நகா் இருளா் காலனியைச் சோ்ந்த செல்வராஜ்(21), சதீஷ்(21), தான்தோன்றியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அரி(23), திருவள்ளூா் மாவட்டம் தொடுகாடு ஓம் நகா் பகுதியை சோ்ந்த கணேஷ்பாபு(21), மோகன்பாபு(24) ஆகிய ஐந்து பேரும் கஞ்சா விற்றது தெரிந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.