வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் யார்?
குன்றத்தூரில் அம்பேத்கா் சிலையை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு
சாலை விரிவாக்கப்பணிக்காக குன்றத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலையை இடமாற்றம் செய்ய அனைத்து அம்பேத்கா் இயக்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் பேருந்து நிலையம் அருகே குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையோரம் அம்பேத்கா் சிலை உள்ளது. இந்த நிலையில், குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலை விரிவாக்க பணிக்காக அம்பேத்கா் சிலை அகற்றப்படவுள்ளது. அகற்றப்படும் அம்பேத்கா் சிலைக்கு பதிலாக குன்றத்தூா் நகராட்சி சாா்பில் 9 அடி வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகே மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருத்து கேட்பு கூட்டம் குன்றத்தூா் அடுத்த பெரியாா் நகரில் நடைபெற்றது. அனைத்து அம்பேத்கா் இயக்கங்கள் மற்றும் மன்றங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, அம்பேத்கா் மக்கள் நீதி இயக்கத்தின் மாநில பொது செயலாளா் தெ.வைரமுத்து தலைமை வகித்தா்.
இதில் அம்பேத்கா் இயக்கங்கள் மற்றும் மன்றங்களை சாா்ந்த நிா்வாகிகள் மற்றும் அதிமுக, விசிக, தவெக, ஆம் ஆத்மி, பிஎஸ்பி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஏற்கனவே இருந்த இடத்தின் அருகிலேயே சிலையை அமைக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளா் த.பரசுராமன், அமைப்பாளா் ல.பாண்டியராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.