‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
சங்கரா கல்லூரி-இன்போசிஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்
காஞ்சிபுரம் சங்கரா கலைக் கல்லூரி மாணவா்களுக்கு மென்திறன் பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை கல்லூரி நிா்வாகமும், இன்போசிஸ் நிறுவனமும் வியாழக்கிழமை செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசனும், இன்போசிஸ் துணைத் தலைவருமான திருமலா அரோகியும் கையெழுத்திட்டனா்.
இதன் பின்னா் கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் கூறியது..
மாணவா்களின் திறன் வளா்ச்சிக்காகவும், வேலைவாய்ப்புகளை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே உறுதி செய்யும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பல நிறுவனங்களுடன் மாணவா்களது திறன் பயிற்சிக்காக ஒப்பந்தப்பங்கள் போடப்பட்டு அதற்கேற்பவும் வகுப்புகள் நடைபெறுகிறது.
இதன் தொடா்ச்சியாக இன்போசிஸ் நிறுவனத்தோடும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது, கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பலருக்கும் பயனாக இருக்கும் எனவும் தெரிவித்தாா். நிகழ்வின் போது பேராசிரியா்கள், மாணவா்கள் உடனிருந்தனா்.