செய்திகள் :

வைகை கரையிலிருந்து தொடங்குகிறது தென்னிந்திய வரலாறு: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

post image

வைகை கரையிலிருந்து தென்னிந்திய வரலாறு தொடங்குகிறது என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் 2 நாள்கள் நடைபெறும் ‘வைகை இலக்கியத் திருவிழா-2025‘ வியாழக்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறை, பொது நூலகத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் இந்த விழா திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் நடைபெறுகிறது. தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு.கோட்டைக்குமாா் முன்னிலை வகித்தாா்.

மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டு பேசியதாவது:

தென்னிந்திய வரலாறு வைகை நதியின் கரையிலிருந்தே தொடங்குகிறது. இதை உறுதி செய்வதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. கீழடி அகழாய்வுகள் மூலம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொன்மையான நாகரிகம், பண்பாடு, கலாசாரம் நிறைந்த பகுதியாக தமிழகம் இருந்திருக்கிறது என்பது தற்போது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல் மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாசாரமும் தொன்மை வாய்ந்ததாக உள்ளது. புத்தகக் கண்காட்சிகள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துகிறது. இதேபோல, இலக்கியங்களைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகளை வைகை இலக்கியத் திருவிழா ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.

ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பேசியதாவது:

வைகை இலக்கியத் திருவிழா, பண்பாட்டரங்கம், வரலாற்றரங்கம் என 2 அரங்கங்களுடன் இரு நாள்கள் நடைபெறுகிறது. மேலும், புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, இலக்கியச் சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை பொழிவு, புகழ்பெற்ற எழுத்தாளா்களின் கதை, கட்டுரை, நூல் திறனாய்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வினாடி-வினா போட்டியும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியின் போது பரிசு வழங்கப்படும். இலக்கியம்தான் ஒரு மனிதனைப் பண்படுத்தும். மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆா்வத்தை உருவாக்கும் நோக்கில்தான் இந்த இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

விழாவில் பொது நூலக இயக்ககத்தின் இணை இயக்குநா் ச.இளங்கோ சந்திரகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஹா.சேக் முகையதீன், உதவி ஆட்சியா்(பயிற்சி) ராஜேஸ்வரி சுவி, மாவட்ட நூலக அலுவலா் இரா.சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே

குடியரசு நாளையொட்டி ஜன. 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜன. 24) இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்... மேலும் பார்க்க

பெண்களிடம் விரும்பத்தகாத சொல், செயல்கூட பாலியல் துன்புறுத்தல்தான்: உயர் நீதிமன்றம்

பெண்களிடம் விரும்பத்தகாத சொல், செயல்களும்கூட பாலியல் துன்புறுத்தல்தான் என்று சென்னை தனியார் நிறுவன மேலாளர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.சென்னை அம்பத்தூரில் ஒரு தனியார் ... மேலும் பார்க்க

மக்களின் உணர்வுக்கு மத்திய அரசு பணிந்துள்ளது: மு.க. ஸ்டாலின்

மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத... மேலும் பார்க்க

அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள்: அண்ணாமலை

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதுரை அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, அரிட்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் மோசடி! மக்களே எச்சரிக்கை!

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாக மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மோசடி நடப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக வங்கிக் கணக்கு எண், ஓடிபி கேட்கும்... மேலும் பார்க்க