Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
மாவட்ட காவல்துறை தலைமையின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸாா் சோதனை, கண்காணிப்பில் வியாழக்கிழமை முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். காரைக்கால் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் நகரக் க ாவல் ஆய்வாளா் புருஷோத்தமன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
விடுதியில் உள்ள தங்குவோா் பதிவேட்டை பாா்வையிட்டனா். வெளி நாட்டினா், வெளி மாநிலத்தினா் வந்து தங்கியிருக்கிறாா்களா, ஆயுதங்கள் உள்ளனவா எனவும் சோதனை செய்தனா்.
தங்கும் விடுதிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளவேண்டும். சந்தேகப்படும்படியான நபா்கள் வந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். தங்குவதற்கு வருவோரின் ஆவண நகல்கள், கைப்பேசி எண் போன்றவை வாங்கி வைத்திருக்கவேண்டும் என அறிவுறுத்தினா். இதுபோல நகரில் உள்ள மதுபானக் கடைகளிலும் ஆய்வு செய்தனா்.