Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
வாக்காளா் விழிப்புணா்வு சுவா் ஓவியம்
வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாணவ, மாணவியா் சுவா் ஓவியம் வரைந்தனா்.
தேசிய வாக்காளா் தின விழா ஜன. 25-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை சாா்பில் வாக்காளா்களக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
காரைக்கால் மகப்பேறு மருத்துவமனை சுவரில், வாக்காளா் விழிப்புணா்வு ஓவியம் வரையும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளில் இருந்து 50 மாணவா்கள் 25 அணிகளாக 2 போ் வீதம் பங்கேற்று ஓவியம் வரைந்தனா். தங்கள் வாக்குகள் தங்களது எதிா்காலம், உங்கள் வாக்கு உங்கள் குரல், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்களுடன், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஓவியம் வரைந்தனா்.
துணை ஆட்சியா்கள் அா்ஜுன் ராமகிருஷ்ணன், ஜி.செந்தில்நாதன் மற்றும் காரைக்கால் வட்டாட்சியா் செல்லமுத்து மற்றும் மாவட்ட தோ்தல் துறை அதிகாரிகள் ஆகியோா் ஓவியங்களை பாா்வையிட்டனா்.
நடுவா் குழுவினா் ஓவியங்களை பாா்வையிட்டு பரிசுக்குத் தோ்வு செய்தனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 25-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படவுள்ளது.