செய்திகள் :

TVK : 'பனையூரில் திடீர் மீட்டிங்; முதற்கட்ட மா.செ அறிவிப்பு?' - நிர்வாகிகளைச் சந்திக்கிறாரா விஜய்?

post image
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகமான பனையூரில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கட்சியின் தலைவரான விஜய் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது
TVK - விஜய்

சென்னை உட்பட குறிப்பிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு பனையூர் அலுவலகத்திலிருந்து திடீர் அழைப்பு சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் இன்று காலை 10 மணி முதல் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில்தான் கட்சியின் தலைவரான விஜய்யும் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியே கட்சி தொடங்கப்பட்டிருந்தாலும் கட்சிக்கென நிர்வாகிகளை அறிவிக்காமல் இருந்தார்கள். மக்கள் இயக்கமாக இருந்த போது எந்தெந்த நிர்வாகிகள் இருந்தார்களோ அவர்களையே கட்சிப் பொறுப்பிலும் வைத்திருந்தார்கள். இப்போது கட்சிக்கென புதிதாக நிர்வாகிகளை தேர்வு செய்யும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 10 ஆம் தேதி இதுசம்பந்தமாக தமிழகம் முழுவதுமுள்ள அத்தனை மாவட்டப் பொறுப்பாளர்களையும் அணித்தலைவர்களையும் ஆனந்த் நேரில் சந்தித்து, இரண்டு நாட்களுக்கு தொடர் மீட்டிங்கை நடத்தியிருந்தார். புதிய மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை அந்த மீட்டிங்கில் நடந்திருக்கிறது. விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மா.செ பதவிக்கான பரிசீலனையில் இருக்கு நிர்வாகிகளின் முழு விவரமும் எழுதி வாங்கப்பட்டிருக்கிறது.

TVK

மக்கள் இயக்கமாக இருக்கும்போது நீங்கள் செய்த 5 நற்பணிகள், கட்சி ஆரம்பித்த இந்த ஒரு வருடத்தில் நீங்கள் செய்த 5 நற்பணிகள் என்னென்ன போன்ற கேள்விகள் அதில் முக்கியமாக இடம்பெற்றிருக்கிறது. கோஷ்டி மோதல் மற்றும் உள்ளடி வேலைகளால் சில மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமிப்பதில் கொஞ்சம் சிக்கலும் இருந்திருக்கிறது. எல்லாவற்றையும் ஆனந்த் அன்றே உட்காந்து பேசி முடித்திருக்கிறார்.

பிப்ரவரி 2 ஆம் தேதி கட்சி ஆரம்பித்து முதலாண்டு நிறைவு பெறுகிறது. அதற்குள் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என விஜய் விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிர்வாகிகளை குழு குழுவாக சந்தித்து பேச விஜய் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

முதற்கட்டமாக வட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை விஜய் இன்று சந்திக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் ஒரு மா.செ குழுவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். நிர்வாகிகளுக்கு மீட்டிங் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதே தவிர விஜய் அவர்களை சந்திப்பாரா இல்லையா என்கிற செய்தி இன்னும் தெளிவாக சொல்லப்படவில்லை.

Vijay TVK - விஜய் த.வெ.க

ஒவ்வொரு 2 அல்லது 3 தொகுதியை உள்ளடக்கி ஒரு மாவட்டமாக உருவாக்கி கிட்டத்தட்ட 100 மா.செக்களை அறிவிக்க திட்டமிட்டிருந்தார்கள். நிர்வாகிகள் நியமனத்தில் கொஞ்சம் இழுபறி இருப்பதால் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் முதற்கட்டமாக 55 மா.செக்களை மட்டும் அறிவிக்கவிருப்பதாகவும் தகவல் சொல்கிறார்கள் தவெக வட்டாரத்தினர்.

`பெரியார் குறித்த சர்ச்சை கருத்து’ - நாம் தமிழர் கட்சியலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள்?

கடந்த சில வாரங்களாகத் தமிழக அரசியலில் தன் சர்ச்சையான கருத்துக்களால் விவாதமாகியிருக்கிறார் சீமான். இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவிகித வாக்கு வங்கியிருந்தாலும், தேர்தல் ஆணையம் நாம் தமிழர... மேலும் பார்க்க

பாஜக: 'மாநிலத் தலைவர் பதவி ரேஸ்' - விடாத அண்ணாமலை... முட்டி மோதும் சீனியர்கள்; கமலாலய பரபர!

பா.ஜ.க-வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும். பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்படி கடந்த அக்டோபரில் தமிழக பா.ஜ.க-வ... மேலும் பார்க்க

`விஜய் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை வரவேற்கிறோம்..!' - பெ.சண்முகம்

"கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம்" என மதுரை வந்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார் பரந்தூ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `புதிய மதுபான ஆலை அனுமதியில் ஊழல்!’ -சிபிஐ விசாரணை கேட்டு ஆளுநரை சந்தித்த காங்கிரஸ்

புதுச்சேரியில் புதிதாக 8 மதுபான ஆலைகள் அமைக்க முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எம்.பி வைத்திலிங்கம் தலைமையில் ஆளுநரை சந்தித்து... மேலும் பார்க்க

Private Bus: 'சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்?' - மக்கள் விரோத முடிவை எடுக்கிறதா அரசு?

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்... மேலும் பார்க்க