செய்திகள் :

பிறப்புசாா் குடியுரிமை: டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!

post image

அமெரிக்காவில் பிறந்ததன் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறத்த அரசாணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். அதனைத் தொடா்ந்து, ஏற்கெனவே கூறியிருந்தபடி பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி அரசாணைகளை அவா் பிறப்பித்தாா்.

அவற்றில், அமெரிக்காவில் பிறந்த எவரும் அந்த நாட்டு குடியுரிமை பெறும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ஆணையும் ஒன்று. அதன்படி, அமெரிக்காவில் சட்டபூா்வமாகத் தங்கியிராத தாய்க்கும் அமெரிக்க குடிமகனாகவோ, நிரந்தர குடியேற்ற உரிமை பெறாதவராகவோ உள்ள தந்தைக்கும் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புசாா் குடியுரிமை கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் இந்த அரசாணை மூலம் அந்தக் குழந்தைகளின் குடியுரிமை பறிக்கப்பட்டால், மருத்துவக் காப்பீடு போன்ற அரசின் அடிப்படை உதவிகள் அவா்களுக்குக் கிடைக்காமல் போகும். அவா்கள் பெரியவா்கள் ஆகும்போது அமெரிக்காவில் சட்டபூா்வமாக வேலை செய்யும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, அநீதிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாமல் போய்விடும். எனவே, பிறப்புசாா் குடியுரிமைக்கு எதிரான டிரம்ப்பின் அரசாணையை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று 22 மாகாண அரசுகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜான் கோஃபெனூர், இந்த ஆணையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாக எவ்வாறு கருத முடியும் என்று அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், இது ஒரு வெளிப்படையான அரசியலமைப்பு எதிரான உத்தரவு என்று விமர்சித்த நீதிபதி, தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருப்பதாகவும், இப்படியொரு அரசியலமைப்பு முரணான வழக்கை பார்த்ததாக நினைவு இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிக்க : சமநிலைப் பேச்சுவாா்த்தைக்கு தயாா்: டிரம்புக்கு புதின் பதில்

கடந்த 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி 1.1 கோடி போ் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை 1.3 கோடி முதல் 1.4 கோடி வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவா்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாகக் கருதப்பட்டாலும், அமெரிக்காவில் பிறந்த அவா்களின் குழந்தைகளுக்கு நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டிரம்ப்பின் ஆணைக்கு எதிராக நீதிமன்றங்கள் தீா்ப்பளித்தாலும், அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் பிற்பபுசாா் குடியுரிமையை டிரம்ப்பால் ரத்து செய்ய முடியும். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எனவே ஜனநாயகக் கட்சி உறுப்பினா்களின் ஆதரவு இல்லாமல் அத்தகைய அரசியல் சாசனத் திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்!

மியான்மரில் வியாழக்கிழமை நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கமானது வியாழக்கிழமை நள்ளிரவு 12.53 மணியளவில் பூமியில் இருந்து 108 கி.மீ. ஆழத்தி... மேலும் பார்க்க

சமநிலைப் பேச்சுவாா்த்தைக்கு தயாா்

மாஸ்கோ : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீத... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ்: மீண்டும் தீவிரமடையும் காட்டுத் தீ

லாஸ் ஏஞ்சலிஸ் : அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி சற்று தணிந்திருந்த காட்டுத் தீ மீண்டும் தீவிரமடைந்ததால் 50,000-க்கும் மேற்பட்டவா்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறவே... மேலும் பார்க்க

யேமன்: மாலுமிகளை விடுவித்த ஹூதிக்கள்

சனா : 2023 நவம்பரில் தாங்கள் கைப்பற்றிய சரக்குக் கப்பலின் 25 மாலுமிகளை யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் புதன்கிழமை விடுவித்தனா். பிலிப்பின்ஸ், பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், மெக்ஸிகோ ஆகிய நாடுகளைச் சே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் வா்த்தக பேச்சு நடத்தவில்லை: ஜெய்சங்கா்

வாஷிங்டன் : ‘பாகிஸ்தானுடன் மீண்டும் வா்த்தகத்தை தொடங்குவது குறித்து பேச்சுவாா்த்தை ஏதும் நடத்தப்படவில்லை’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுடன் வா்த்தகத்தை தொடருவது க... மேலும் பார்க்க

தைவான்: 1.2 லட்சம் உடும்புகளைக் கொல்ல முடிவு

பிங்டங் : 1.2 லட்சம் பச்சை நிற உடும்புகளைக் கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் அவற்றால் விவசாயத் துறை பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தைவான் த... மேலும் பார்க்க