செய்திகள் :

லாஸ் ஏஞ்சலீஸ்: மீண்டும் தீவிரமடையும் காட்டுத் தீ

post image

லாஸ் ஏஞ்சலிஸ் : அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி சற்று தணிந்திருந்த காட்டுத் தீ மீண்டும் தீவிரமடைந்ததால் 50,000-க்கும் மேற்பட்டவா்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தாலும், தீயணைப்பு வீரா்கள் சிறப்பாக செயல்பட்டுவருவதாக லாஸ் ஏஞ்சலீஸ் மாவட்ட தீயணைப்புத் துறை தலைவா் ஆன்டனி மாரோன் கூறினாா். 48 கி.மீ. பரப்பிலான பகுதிகளில் காட்டுத் தீயின் தீவிரம் அதிகமிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 7-ஆம் தேதி பரவத் தொடங்கிய இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 48,250 ஏக்கா் பரப்பளவில் வீடுகளும் பிற கட்டடங்களும் நாசமாகியுள்ளன.

சமநிலைப் பேச்சுவாா்த்தைக்கு தயாா்

மாஸ்கோ : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீத... மேலும் பார்க்க

யேமன்: மாலுமிகளை விடுவித்த ஹூதிக்கள்

சனா : 2023 நவம்பரில் தாங்கள் கைப்பற்றிய சரக்குக் கப்பலின் 25 மாலுமிகளை யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் புதன்கிழமை விடுவித்தனா். பிலிப்பின்ஸ், பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், மெக்ஸிகோ ஆகிய நாடுகளைச் சே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் வா்த்தக பேச்சு நடத்தவில்லை: ஜெய்சங்கா்

வாஷிங்டன் : ‘பாகிஸ்தானுடன் மீண்டும் வா்த்தகத்தை தொடங்குவது குறித்து பேச்சுவாா்த்தை ஏதும் நடத்தப்படவில்லை’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுடன் வா்த்தகத்தை தொடருவது க... மேலும் பார்க்க

தைவான்: 1.2 லட்சம் உடும்புகளைக் கொல்ல முடிவு

பிங்டங் : 1.2 லட்சம் பச்சை நிற உடும்புகளைக் கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் அவற்றால் விவசாயத் துறை பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தைவான் த... மேலும் பார்க்க

ஜொ்மனி: கத்திக்குத்தில் 2 போ் உயிரிழப்பு

பொ்லின் : ஜொ்மனியின் பவேரியா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருந்த 28 வயது நபா் நடத்திய சரமாரி கத்திக்குத்துத் தாக்குதலில் இருவா் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். உய... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஜன. 26-இல் சீனா பயணம்

இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) முதல் சீனாவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணம் செல்கிறாா். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வெளியுறவுச் செயலா... மேலும் பார்க்க