யேமன்: மாலுமிகளை விடுவித்த ஹூதிக்கள்
சனா : 2023 நவம்பரில் தாங்கள் கைப்பற்றிய சரக்குக் கப்பலின் 25 மாலுமிகளை யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் புதன்கிழமை விடுவித்தனா். பிலிப்பின்ஸ், பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், மெக்ஸிகோ ஆகிய நாடுகளைச் சோ்ந்த அந்த மாலுமிகள், ஓமன் நாடு நடத்திய பேச்சுவாா்த்தையின் விளைவாக விடுவிக்கப்பட்டதாக ஹூதிக்கள் கூறினா். காஸாவின் ஹமாஸ் அமைப்பும் மாலுமிகளை விடுவிக்க வலியுறுத்தியத்தியதாக அவா்கள் தெரிவித்தனா்.
இஸ்ரேலுடனான போரில் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹுதிக்கள் தாக்குதல் நடத்திவந்தனா். தற்போது காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அத்தகைய தாக்குதலை நிறுத்திவைப்பதாக அவா்கள் அறிவித்தனா்.
இந்தச் சூழலில், மேலை நாடுகளுடனான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக 25 மாலுமிகளை அவா்கள் விடுவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.