அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
தைவான்: 1.2 லட்சம் உடும்புகளைக் கொல்ல முடிவு
பிங்டங் : 1.2 லட்சம் பச்சை நிற உடும்புகளைக் கொல்ல தைவான் அரசு முடிவு செய்துள்ளது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் அவற்றால் விவசாயத் துறை பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தைவான் தீவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் மட்டும் 2 லட்சம் பச்சை நிற உடும்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இயற்கையாக வேட்டையாடி அவற்றின் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கூடிய மிருகங்கள் இல்லாததால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இயற்கைச் சமநிலையை பாதிக்கிறது.
ஏற்கெனவே, சிறப்பு வேட்டைக்காரா்களைப் பயன்படுத்தி ஒவ்வோா் உடும்புக்கும் தலா 15 டாலா் (சுமாா் ரூ.1,300) பரிசுத் தொகை அளித்து 70,000 உடும்புகளை தைவான் அரசு கொன்றது. தற்போது 1.2 லட்சம் உடும்புகளைக் கொல்லும் திட்டத்தை அமல்படுத்தும்போது மனிதாபிமான முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தன்னாா்வ அமைப்புகள் கோரிவருகின்றன.