செய்திகள் :

அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல்; நடந்தது என்ன?

post image

ராமேஸ்வரம் நகரில் துப்பரவு பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தினை தனியார் ஒருவரிடம் நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த நபர், நகரில் அன்றாடம் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வட மாநிலங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை நியமித்துள்ளார்.

அக்னி தீர்த்த கடற்கரை

இதில் வட மாநிலங்களை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையம், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினால் அமைத்து தரப்பட்டுள்ள தகர செட்டுகளில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அக்னி தீர்த்த பகுதியில் உள்ள தகர செட்டில் வட மாநிலத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குடும்பத்துடன் உறங்கியுள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அந்த தகர செட்டிற்குள் குடி போதையில் 3 பேர் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த சிறுமியை தூக்கி செல்ல முயன்றுள்ளனர். இதனால் அச்சிறுமி அலறியுள்ளார். சிறுமியின் அலறலை கேட்ட குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை மட்டும் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் இது குறித்து தங்களது ஒப்பந்தகாரருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நபர் அங்கு வந்த விசாரித்து கொண்டிருந்த போது பிடிப்பட்ட நபரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நேற்று காலை போலீஸாரிடம் முறையிடப்பட்ட நிலையில் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

தப்பி ஓடிய நபர்

இந்நிலையில் இச்சம்பவம் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் கவனத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் களத்திற்கு வந்த போலீஸார், பாதிக்கப்பட்ட வட மாநில துப்புரவு பணியாளர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி புகார் பெற்றுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் அக்னி தீர்த்தத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா சிக்கிய சம்பவம் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது வட மாநில சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் அந்த அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

குடிபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய சகோதரர்; கூலிப்படையை ஏவிக் கொன்ற இளைஞர்! - மும்பை `திடுக்'

மும்பை, காஞ்சூர் மார்க் பகுதியில் உள்ள மெட்ரோ கார் ஷெட் அருகில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதை மீட்டு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். ஆரம்பத்தில் விபத்து மரணம் என்று போ... மேலும் பார்க்க

Jammu Mystery Deaths: 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்; தனிமைப்படுத்தப்பட்ட ஜம்மு கிராமம்

ஜம்முவின் பட்டால் கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த 200 பேர் ரஜௌரி நகருக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், புதிதாக சிசிடி... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்... தேனியில் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்..!

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு சாலையில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள 19 துறைகளில் 275 மாணவ - மாணவி... மேலும் பார்க்க

``ப்ளான் அப்ரூவல் செய்ய ரூ.20,000 லஞ்சம்..'' கறாராக வசூலித்த நகராட்சி அலுவலர் கைது..!

பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர் ஒருவர், தனது வாடிக்கையாளருக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான பிளான் அப்ரூவல் கோரி பரமக்குடி நகராட்சியில் மனு அளித்துள்ளார். இதற்கான அரசு நிர்ணயித்த கட்டணத்தையு... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு; தலைமறைவாக இருந்தவர் கோர்ட்டில் சரண்!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமா... மேலும் பார்க்க

புத்தகப் பையில் நாட்டு வெடிகுண்டு… +1 மாணவருக்கு கத்திக் குத்து… வகுப்பறையில் வெடித்த காதல் பிரச்னை!

ஒன்றரை அடி நீள பட்டக்கத்தி...புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் +1 படித்து வரும் சஞ்சய், குமரன் என்ற இரண்டு மாணவர்கள் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன), தனித்தனி அணி... மேலும் பார்க்க