செய்திகள் :

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு; தலைமறைவாக இருந்தவர் கோர்ட்டில் சரண்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஜகபர் அலி

குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியோர் நடத்தி வரும் ஆர்.ஆர் குரூப்ஸ் என்ற பெயரிலான கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். இந்நிலையில்தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி அன்று தொழுகை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதித்திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அந்த வாகனம்

அவர்களை வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையாவை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினரான கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள ஆர்.ஆர் குருப்ஸூக்கு சொந்தமான கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் கடந்த இரண்டு நாட்களாக அளவிடும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராமையா

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ‘இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும்’ என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் மாற்றி நேற்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராமையா நமணசமுத்திரம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்... தேனியில் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்..!

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு சாலையில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள 19 துறைகளில் 275 மாணவ - மாணவி... மேலும் பார்க்க

``ப்ளான் அப்ரூவல் செய்ய ரூ.20,000 லஞ்சம்..'' கறாராக வசூலித்த நகராட்சி அலுவலர் கைது..!

பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர் ஒருவர், தனது வாடிக்கையாளருக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான பிளான் அப்ரூவல் கோரி பரமக்குடி நகராட்சியில் மனு அளித்துள்ளார். இதற்கான அரசு நிர்ணயித்த கட்டணத்தையு... மேலும் பார்க்க

புத்தகப் பையில் நாட்டு வெடிகுண்டு… +1 மாணவருக்கு கத்திக் குத்து… வகுப்பறையில் வெடித்த காதல் பிரச்னை!

ஒன்றரை அடி நீள பட்டக்கத்தி...புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் +1 படித்து வரும் சஞ்சய், குமரன் என்ற இரண்டு மாணவர்கள் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன), தனித்தனி அணி... மேலும் பார்க்க

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய ராட்சத மரக்கட்டை... சுங்கத்துறையினர் விசாரணை..!

தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதை பொருள்கள், மருந்து பொருள்கள் போன்றவை கடத்தி செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. இதே போல் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவிற்கு தங்க கட்டிகள் க... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: ஒரே இரவில் ஐந்து இடங்களில் தொடர் கொள்ளை - மங்கி குல்லா திருடர்களால் மக்கள் அச்சம்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பகுதிகளில் கடந்த 21ம் தேதி இரவு வீரக்குறிச்சி, சாமியார் மடம், உதய சூரியபுரம், கொண்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ப... மேலும் பார்க்க

விருதுநகர் : `விலை உயர்ந்த டூவீலர் வாங்க லோடு ஆட்டோ திருடிய இளைஞர்கள்' - 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் விலை உயர்ந்த டூவீலர் வாங்குவதற்காக லோடு ஆட்டோவை திருடி விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்... மேலும் பார்க்க