செய்திகள் :

Trump : நெருக்கப்படும் LGBTQ மக்கள்; `உங்கள் அணுகுமுறை சரிதானா அதிபரே?' - கொதிக்கும் திருநர் சமூகம்!

post image

உலகில் வல்லரசு நாடாக திகழக்கூடிய அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கிறார். ஜனவரி 20-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:30 மணி அளவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை உள்ளரங்கத்தில் ட்ரம்ப் பதவியேற்றார். இதற்கு முன்னர் 2017 முதல் 2021 வரை நான்கு ஆண்டுகள் அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்டிரம்ப் பதவியில் இருந்தார். அந்த வகையில் இவர் தற்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார். அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு நபர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆட்சி ட்ரம்பின் முந்தைய ஆட்சியை விட முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரையின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, தனது முதல் உரையை நிகழ்த்தினார். இதில் ட்ரம்ப் தனக்கு மிகவும் உயரமான மகன் இருக்கிறான் எனக் கூறி boran Trump-ஐ மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ட்ரம்ப்

`golden age of America begins right now' எனக் கூறிய ட்ரம்ப், தனது தலைமையிலான அரசு அமெரிக்காவின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் என பெருமிதப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் எலான் மஸ்க் ,ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர் பெர்க், அம்பானி போன்ற உலகின் முன்னணி தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர். J.D. வான்ஸ் துணை அதிபராக இந்நிகழ்ச்சியில் பதவி ஏற்றார். மேலும் உலகின் முதன்மை கோடீஸ்வரரான எலான் மஸ்க் உற்சாகமாக நடனமாடி ட்ரம்ப்பின் வெற்றியைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் இயக்கத்தினரால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட, இஸ்ரேல் நாட்டவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராணுவ வாளுடன் உற்சாகமாக அதிபர் ட்ரம்ப் நடனமாடினார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிறகு, அதிபரான முதல் நாளிலேயே பல்வேறு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் சுமார் 1,500 நபர்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்த ஆவணத்திலேயே ட்ரம்ப் முதலில் கையெழுத்திட்டார்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி பெற்றோர்கள் எந்த நாட்டவர்களாக இருந்தாலும், குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்திருந்தால் குடியுரிமை வழங்கும் சட்ட விதியினை நீக்கியுள்ளார், ட்ரம்ப். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருப்பவர்களை நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளார். டிக் டாக் செயலியை தற்காலிகமாக தடை செய்வதனை 75 நாள்கள் வரை தள்ளிவைத்துள்ளார்.

Trump - ட்ரம்ப்

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதற்கு கொரோனா காலத்தில் அமெரிக்கா அதிக அளவில் நிதி உதவி செய்தபோதிலும், உலக சுகாதார அமைப்பு சரியாகச் செயல்படாததுதான் காரணம் எனவும் கூறியுள்ளார். இரண்டாவது முறையாக உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற உத்தரவையும் ட்ரம்ப் ரத்து செய்திருக்கிறார். மேலும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் பிறப்பிக்கப்பட்ட 78 உத்தரவுகளைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் ஒரு மில்லியன் வெளிநாட்டவர்கள் சட்ட பூர்வமாக குடியேற வாய்ப்பு வழங்கிய CBP one செயலியை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார், ட்ரம்ப்.

மேலும் திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டங்களை நீக்கி, இனி ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே உள்ளன என்பது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் எனவும் தெரிவித்ததோடு, சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் தடை விதித்துள்ளார். அத்துடன் ராணுவத்தில் மாற்று பாலினத்திற்கு தடை போன்ற உத்தரவுகளையும் பிறப்பிக்கவுள்ளதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

இவ்வாறான பல உத்தரவுகளில் கையெழுத்திட்ட பிறகு , தான் கையெழுத்திட்ட பேனாவினை கூட்டத்தில் வீசினார். அதனை மக்கள் எடுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

LGBTQ

ட்ரம்ப்பின் நிர்வாகம் இதற்கு முன்னர் ஆட்சி புரிந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலும் LGBTQ+ சமூக மக்களின் உரிமைகளை மீறுதல், பாரபட்சமான கொள்கைகளை வலியுறுத்துதல், அவர்களுக்கான சேவைகளைப் புறக்கணித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இத்தகைய அணுகுமுறையின் மூலம், lgbtq+ மக்களின் வாழ்க்கை, குடும்பம், சமூகம் மற்றும் உரிமைகள் போன்றவற்றை ட்ரம்ப் நிர்வாகம் புறக்கணிப்பது, தெளிவாகப் புலப்படுகிறது.

அமெரிக்காவின் 1964 சிவில் உரிமைகள் சட்டத்தின் தலைப்பு VII கீழ் எல்.ஜி.பி.டி.கியூ வினை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிரான பாகுபாடு, `பாலின பாகுபாடு' ஆகும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் சமுதாயத்தில் திருநர் சமூகத்தைச் சேர்ந்த பலர் சாதனைகளைப் படைத்து மக்களிடம் ஒன்றுபட்டு வாழ முயலும் இக்காலக்கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப், தங்களை நசுக்கி ஒடுக்க முயல்வதாக அந்த மக்கள் குற்றம்சாட்டி வேதனை தெரிவிக்கிறார்கள். ட்ரம்ப் அதிபராகியிருப்பது அவர்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

எலான் மஸ்க்கின் திருநங்கை மகளான Vivian Jenna Wilson கூட ட்ரம்ப் ஆட்சி குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். `இந்த நாடு வாழ தகுதியற்றது' எனக் கூறி, தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில், நாகரிக மிகுதிபெற்ற நாட்டில் LGBTQ+ சமூகத்தினரை நெருக்கும் விதமாகத் தொடர்ந்து ட்ரம்ப் செயல்பட்டு வருவது... உலக அரங்கில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

LGBTQ+

ட்ரம்ப்பின் இத்தகைய அணுகுமுறை குறித்து கவிஞரும் எழுத்தாளருமான அக்னி பிரதீப், ``மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ட்ரம்ப் மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறார். மற்ற நாடுகளில் பாலின சமத்துவத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் காலகட்டத்தில் இவ்வாறான முனைப்பு நடவடிக்கைகள் மற்ற நாடுகளில் இருக்கும் பாலின ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது கையெழுத்திட்ட உத்தரவுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியிருப்பது போன்றவை ட்ரம்ப்பின் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பாலினத்தால் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்களான திருநங்கைகள், திருநம்பிகள், பால் புதுமையினர் போன்றவர்களுக்கு மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்துகிறது.

பாலின ஆதிக்கம் செலுத்தும் மக்களினை ஆதரிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்தியாவில் தற்போதுதான் திருநங்கைகள் திருநம்பிகள் போன்றவர்கள் வாக்களிக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் முன்னோக்கிப் பயணித்து, பல சாதனைகளைப் படைத்து சம உரிமைக்காகப் போராடி வரும் நிலையில்... டொனால்ட் ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும் மனிதர்கள் தானே! எங்களது வாழ்வும் வாழ்வியலும் உயிரும் உங்களுக்கு அவ்வளவு ஏளனமாகப் போய்விட்டதா? இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவதற்கு நீங்கள் பயோ வார் போன்றவற்றையே அமல்படுத்திவிடலாம். எங்களை எங்கு பார்த்தாலும் சுட்டுக் கொன்றுவிடலாம் அல்லது கருணை கொலை செய்துவிடலாம் என்ற உத்தரவையே பிறப்பித்து விடலாம். ஆனால் இந்த திட்டம் அதனை விட மோசமானதாக இருக்கிறது. இது மனிதம் சார்ந்த கருத்தே தவிர... சாதி, மதம், மொழி, இனம், நிறம் போன்றவற்றை சார்ந்தது அல்ல. இவை அனைத்துக்கும் அப்பாற்பட்ட சமூகத்தை உருவாக்கப் போராடுகிறோம்.

இவ்வாறான ஆதிக்கவாதிகள், சிறுபான்மையினரை ஒடுக்க முயல்வது மிகவும் வேதனை அளிக்கிறது. சக மனிதர்களை மனிதர்களாகவே மதிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் எந்த நாடும் எழுச்சியோ வளர்ச்சியோ அடைய முடியாது. நீங்கள் திருநர் சமூகத்தினருக்கு காசோ பணமோ கொடுத்து உதவ தேவையில்லை. அவர்கள் சுயமரியாதைக்கு எந்த ஒரு பங்கமும் விளைவிக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள். இவ்வாறான உரிமைகளை இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் கொடுக்கிறது. சாதி, மதம், இனம், மொழி இவற்றை கடந்து மனிதத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை ஆகும்" என்றார்.

கிரேஸ் பானு
கிரேஸ் பானு

சமூகச் செயற்பாட்டாளர் கிரேஸ் பானு, ``அதிபராக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் சக உரிமை கொடுக்க வேண்டியது அவரின் கடமை. திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விளையாட்டுத்துறையில் கலந்து கொள்வதற்கு தடை விதித்துள்ளார். ஆனால் அதற்கான மாற்று வழி? ட்ரம்ப்பின் பாலின பாகுபாடு ஆணை, நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆணாதிக்கம், அதிகார வர்க்கத்திடமிருந்து இவற்றை எதிர்பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ட்ரம்ப் அதிகபட்சமான சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகிறார். தற்போது உலகம் உணர்ந்திருக்கும் ட்ரம்ப் யார் என்பதை. நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம், என்றாவது ஒருநாள் எங்கள் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையுடன். திருநர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே பயம் கொள்ளாமல் தைரியத்தோடு மாற்று வழியை நோக்கிப் போராடுவோம்!"

Kolkata Rape case: ``நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தாலும் மறுப்பு கிடையாது.." -குற்றவாளியின் தாய்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. இது தொடர்பாக, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப... மேலும் பார்க்க

சென்னையில் அதிர்ச்சி... மகளின் ஆபாச வீடியோக்களை விற்ற தம்பதி - பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்

சென்னையில் உள்ள ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நலக் குழு சார்பில் புகார் ஒன்று சில தினங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை ஒரு கும்பல் பணத்துக்காக சமூக... மேலும் பார்க்க

`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கில் நடவடிக்கை

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிறுவன் ... மேலும் பார்க்க

Facebook: முகநூலில் அத்துமீறல்.. நடிகையின் பதிவுக்கு ஆபாச கமெண்ட்; 27 பேர்மீது வழக்குப்பதிவு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோஸ். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தனியார் நிறுவனங்களின் திறப்புவிழாக்களில் கலந்துகொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வார். இ... மேலும் பார்க்க

Karnataka: புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் `பாலியல் அத்துமீறல்' - DSP கைது!

கர்நாடகாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ பரவவியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.58 வயதான ராமசந்திரப்பா துமகுரு மாவட்டம் மதுகிரியில் பணியாற்... மேலும் பார்க்க

கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு திரும்பிய +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... குமரியில் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஒரு பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த மாணவி உள... மேலும் பார்க்க