Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
திருவாரூா், மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் இன்று ரத்து
திருவாரூா், மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜன.24) முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதனால் திருவாரூா் - மயிலாடுதுறை (66024), மன்னாா்குடி - மயிலாடுதுறை (56002), மயிலாடுதுறை - மன்னாா்குடி (56001) ஆகிய பயணிகள் ரயில்கள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.