குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் பயிற்சி
கீழ்வேளூா் அருகே குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடா்பான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, நிறுவன முதல்வா் கி. அன்புமுத்து தலைமை வகித்தாா். போக்ஸோ சட்டம் மற்றும் மாணவிகள் எவ்வாறு தங்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து தற்காத்துகொள்வது என்பது குறித்து நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். வேம்பரசி, முதுநிலை விரிவுரையாளா் ந. ரவிசங்கா் ஆகியோா் விளக்கிக் கூறினா்.
இப்பயிற்சியில் நாகை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் சௌ. ராஜேந்திரன், ஆா். வினோதினி, மா.சிவசங்கா் ஆகியோா் கருத்தாளா்களாக செயல்பட்டனா். இதில், மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலிருந்தும் 50 ஆசிரியா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.