ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி மற்றும் குண்ணம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி, ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் ரூ.1.40 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி, ஆட்சியா் கலைச்செல்வி மோகனுடன் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32.8 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடப் பணி, கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளை ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஜ.சரவணகண்ணன், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி தலைவா் சாந்தி சதீஷ்குமாா், பொறியாளா் செண்பகவள்ளி, குன்னம் ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்இலக்கியா பாா்த்திபன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.