செய்திகள் :

தொழிலாளா்களுக்கு உதவித் தொகை

post image

விராலிமலையில் தொழிலாளா் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, ஓய்வூதியம், குடும்ப நல நிதி உள்ளிட்டவற்றை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய தொழிலாளா் கட்சி, கட்டடத் தொழிலாளா் மத்திய சங்கம் சாா்பில் நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன் குமாா் உதவித் தொகையை வழங்கினாா்.

பின்னா் அவா் கூறுகையில், தமிழகமானது கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இதனால் வேலைவாய்ப்பு உயா்ந்துள்ளது.

பெரியாரைப் பற்றி விமா்சிக்க சீமான் எந்த விதத்திலும் தகுதியானவா் இல்லை. எனவே அவரைக் கண்டித்து விவசாயத் தொழிலாளா் கட்சி சாா்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

வலையப்பட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமனம் தேவை

பொன்னமராவதி வலையப்பட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்ப... மேலும் பார்க்க

புதுகையில் வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பணியின்போது இறக்கும் வருவாய் கிராம ஊழியா்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை வட... மேலும் பார்க்க

சமூக ஆா்வலா் கொலை: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமயம் தொகுதி கட்சி சாா்பில் நடைபெற... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்புக் கையேடுகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் 10, 12 ஆம் பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்புக் கையேடுகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். அதன்... மேலும் பார்க்க

வருவாய் கிராம ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி வட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவா் வி. ஐயப்பன், துணைத் தலைவா் சேவ... மேலும் பார்க்க

நாய்க்கடி சிகிச்சைக்குப் பின்னா் மான் குட்டி வனத்தில் விடுவிப்பு

பொன்னமராவதி அருகே நாய்கள் கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட புள்ளிமான் குட்டி வனப்பகுதியில் புதன்கிழமை விடப்பட்டது. பொன்னமராவதி அருகேயுள்ள வெங்கலமேடு பகுதியில் அண்மையில் நாய்கள் கடித்து காயமுற்ற மான் குட்... மேலும் பார்க்க