Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
வலையப்பட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமனம் தேவை
பொன்னமராவதி வலையப்பட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக் குழு உறுப்பினா் எம். ராமசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் துரை. நாராயணன், ஒன்றியச் செயலா் பக்ருதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எஸ். சங்கா் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் பொன்னமராவதி அண்ணா சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,பொன்னமராவதி தாலுகாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.