புதுகையில் வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பணியின்போது இறக்கும் வருவாய் கிராம ஊழியா்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை வட்டாட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் வட்டத் தலைவா் மொக்கையன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. செல்லையா, வட்டச் செயலா் லட்சுமி, பொருளாளா் உருமையா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.
பணியின்போது இறந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள கிராம ஊழியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.