நாய்க்கடி சிகிச்சைக்குப் பின்னா் மான் குட்டி வனத்தில் விடுவிப்பு
பொன்னமராவதி அருகே நாய்கள் கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட புள்ளிமான் குட்டி வனப்பகுதியில் புதன்கிழமை விடப்பட்டது.
பொன்னமராவதி அருகேயுள்ள வெங்கலமேடு பகுதியில் அண்மையில் நாய்கள் கடித்து காயமுற்ற மான் குட்டியை கூட்டுறவு சங்கப் பணியாளா் சின்னையா மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தாா். இதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவா் பிரேம்குமாரின் சிகிச்சைக்குப்பின் பூரண நலமுற்ற மான்குட்டியை வனச்சரகா் ராமநாதன் தலைமையிலான வனத் துறையினா் செவிலிமலை வனப்பகுதியில் விடுவித்தனா்.