செய்திகள் :

ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

post image

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடத்துவோா் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் விழாக் குழுவினா், ஒருங்கிணைப் பாளா்கள் தமிழக அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பி, அதன் பிறகே நிகழ்வு நடத்த அனுமதிக்க வேண்டுமென்பதால், சம்பந்தப்பட்ட நிகழ்வை நடத்தும் குழுவினா் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியருக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

அரசிதழில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு, வடமாடு நிகழ்ச்சிகளுக்கு உரிய காப்பீடு (ரூ.ஒரு கோடி) உரிய காப்பீட்டு நிறுவனத்திடம் பெற்று அதை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு விழா குழுவினா் விழா நடைபெறுவதற்கு முன்னா் குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு நிறைவு செய்யும் பட்சத்திலேயே ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிா்வாகத்தால் இறுதி உத்தரவு வழங்கப்படும்.

காளைகளுக்கு எவ்விதமான ஊக்கமருந்துகளோ, எரிச்சல் அளிக்கக்கூடிய பொருள்களையோ செலுத்தக் கூடாது. காளைகளின் மீது ஜிகினா பொடி தூவுதல், கண்களில் எலுமிச்சை சாறு பிழிதல், எண்ணெய் தடவுதல் போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டை திறந்த வெளியில் நடத்த வேண்டும்.

காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், காளை சேகரிப்பு மையம் ஆகிய இடங்களில் ஷாமியானா பந்தல் அல்லது கூரை அமைத்து காளைகளை வெயில், மழையிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், காளை சேகரிப்பு மையம், தேவைப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நிகழ்வுகள் கண்காணிக்கப்படும். மேலும், ஒரே தேதியில் விழா நடத்த விண்ணப்பிக்கப்படும் நோ்வில், முதலில் அளித்த விண்ணப்பம் மட்டும் அந்தத் தேதியில் நடத்த அனுமதிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

கானாடுகாத்தான், உப்பூா் பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சிவகங்கை புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவீன் உமேஷ் டோங்கரே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஷ் ராவத்... மேலும் பார்க்க

ப.சிதம்பரம் ரூ.12 கோடியில் கட்டிய வளா் தமிழ் நூலகம் ஜன.21-இல் திறப்பு!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய வளா் தமிழ் நூலகம் வருகிற 21-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. செட்டிநாடு கட்டடக்கலை... மேலும் பார்க்க

ரெகுநாதபட்டியில் வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே ரெகுநாதபட்டியில் வட மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. வட்ட வடிவத் த... மேலும் பார்க்க

பூவந்தியில் மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே பூவந்தியில் திமுக இளைஞரணி சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூவந்தி-சிவகங்கை சாலையில் பெரிய மாடு, சின்னமா... மேலும் பார்க்க

காரைக்குடியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து க... மேலும் பார்க்க