ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
சிவகங்கை புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவீன் உமேஷ் டோங்கரே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஷ் ராவத் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு, திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றாா்.
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், பின்னா் தில்லி பட்டாலியனில் காவல் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்த இவா், நீலகிரி, தஞ்சையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவா். தற்போது சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றாா்.