Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
காரைக்குடியில் சாலையை விரிவாக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கடிதம் அளித்தாா்.
இதுகுறித்து காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காரைக்குடி வருகை புரிந்தாா். அப்போது காரைக்குடி மாநகராட்சியில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் பெரியாா் சிலை முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலையை நெடுஞ்சாலைத் துறை சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக மாற்றியும், இருபுறமும் வடிகால் அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிய கடிதத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி வழங்கினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.