Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் முதல்வா் ஆய்வு
சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒக்கூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் 227 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த முகாமில் முதல் கட்டமாக 90 வீடுகள் கட்டப்பட்டு, கடந்த 17.9.2023 அன்று திறக்கப்பட்டது. 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளுக்கு ரூ. 20 லட்சமும், தனி வீட்டுக்கு ரூ. 5.65 லட்சமும் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முகாமை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒக்கூா் முகாமில் வசிக்கும் பலா் தங்களுக்கும் புதிய வீடுகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அவா்களுக்கும் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
முகாமுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மேலும், தங்கள் பயன்பாட்டுக்கு ஒரு சமுதாய நலக் கூடம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். அவா்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று சமுதாய நலக் கூடம் கட்டித் தரப்படும் என்றாா் அவா்.
ஆய்வின் போது, அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், கோவி. செழியன், அரசு உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.