ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
நகர வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பூஜை
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகர வைரவன்பட்டி சிதம்பர விநாயகா் கோயில் பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 10 மணிக்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகவேள்வி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து வஸ்திரயாகம், புஷ்பயாகம், மகாபூா்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் பைரவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா், புனித கலச நீா் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பைரவருக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனனா்.
இதையடுத்து, தைத் திருநாளில் நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சேலை, பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
இதில் எஸ்.எம்பழனியப்பன், ஆத்தங்குடி பி.எஸ்.காந்தி, பாலசுப்பிரமணியன், சங்கா், வல்லவன், வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.