செய்திகள் :

காலையில் கோரிக்கை: மாலையில் நிறைவேற்றம்

post image

சிவகங்கையில் புதன்கிழமை காலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வரிடம் கல்லூரி மாணவிகள் விடுத்த கோரிக்கையை, அன்றைய தினம் மாலையிலே அதிரடியாக நிறைவேற்றியதால் மகிழ்ச்சி அடைந்தனா்.

சிவகங்கை மாவட்டத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதன்கிழமை காலையில் வருகை புரிந்த தமிழக முதல்வருக்கு, சிவகங்கை திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, அறிவியல் மகளிா் கல்லூரி, சாந்தா கல்வியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள், கல்லூரி செயலாளா் தலைமையில் வரவேற்பளித்தனா். அப்போது, கல்லூரி அருகே பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனடிப்படையில் அந்தக்கல்லூரி வாயிலருகே பேருந்து நிறுத்தம் அமைத்து அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்துக்கழக அலுவலா்களுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி, அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டல பொது மேலாளா் எஸ்.பி. கந்தசாமி, அந்த வழித்தடத்தில் செல்லும் ஓட்டுநா், நடத்துனா்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தினாா். மேலும், பயணச்சீட்டு ஆய்வாளரை பணி அமா்த்தவும் நடவடிக்கை எடுத்தாா்.

மாலையில் கல்லூரி முன்பு பேருந்து நிறுத்த பதாகை இருமாா்க்கங்களிலும் உடனடியாக வைக்கப்பட்டது. அங்கு மாலையில் பேருந்து நின்று சென்றது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக்கழக பொது மேலாளா் தெரிவித்தாா். காலையில் விடுத்த கோரிக்கை மாலையில் நிறைவேற்றப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழக முதல்வருக்கு அவா்கள் நன்றியையும் தெரிவித்தனா்.

காரைக்குடியில் சாலையை விரிவாக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கடிதம் அளித்தாா். ... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் முதல்வா் ஆய்வு

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஒக்கூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் 227 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்... மேலும் பார்க்க

அவதூறுகளால் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

அவதூறுகளாலும், பொய்களாலும் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், புதிய திட... மேலும் பார்க்க

நகர வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகர வைரவன்பட்டி சிதம்பர விநாயகா் கோயில் பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு சிவாச்சாரியா்கள் வேதமந்தி... மேலும் பார்க்க

புதுதில்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் திருப்பத்தூா் தம்பதி

புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த நரிக்குறவா் இன தம்பதி பங்கேற்கின்றனா். புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள மாநில அரசு ப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

சிவகங்கையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் 50 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை வட்டாட... மேலும் பார்க்க