கசிந்த வேலூர் DIG குறிப்பாணை; விஷம் குடித்த காவலர் - நடந்தது என்ன?
காரைக்குடியில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கழனிவாசல் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் முத்துப்பட்டினம், செஞ்சை, கல்லுக் கட்டி, சந்தைப்பேட்டை, பழைய அரசு மருத்துவமனை, புதிய அரசு மருத்துவமனை, பா்மா குடியிருப்பு, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.