சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் சிக்கிய ப...
டெஸ்ட்டில் விளையாட ஆசையா? ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் அறிவுரை!
இந்திய கேப்டன் ரோஹித் டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டுமானால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
37 வயதாகும் ரோஹித் சர்மா பிஹிடி தொடரில் மோசமான ஃபார்மில் இருந்ததால் கடைசி டெஸ்ட்டில் தானாகவே அணியிலிருந்து விலகினார்.
அவருக்குப் பதிலாக பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார். கடந்த காலங்களில் புஜாரா, ரஹானே உள்ளூர் போட்டிகளில் விளையாடி டெஸ்ட் அணிக்கு திரும்பினார்கள்.
மோசமான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் கூறியதாவது:
அழுத்தத்தில் ரோஹித் சர்மா
37 வயதாகும்போது உங்களது தோல்விகள் உங்களை மிகவும் காயப்படுத்தும். எனெனில் ரோஹித் மிகவும் பெருமையான நபர். கடந்த காலங்களில் விளையாடியதுபோல தற்போது விளையாட முடியவில்லை.
இளம் வீரர்கள் நன்றாக விளையாடும்போது இந்த காரணங்கள் மூளையில் அவருக்கு அதிக அழுத்ததை அளிக்கும்.அதுதான் அவரது முடிவெடுக்கும் திறனை பாதித்திருக்கும்.
மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவாரா என்பது குறித்து அவருக்கு தீர்மானமான முடிவு தேவைப்படுகிறது. அப்படி ஆர்வம் இருந்தால் அது அவரது செயல்பாடுகளில் பிரதிபலிக்கும்.
உள்ளூர் கிரிக்கெட் முக்கியம்
உள்ளூர் கிரிக்கெட் விளையாட சொல்லி பலரும் பேசி வருகிறார்கள். புஜாரா, ரஹானே மாதிரியான வீரர்கள் இதுமாதிரி சூழ்நிலைகளில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி அதற்கான் ஆர்வத்தை காட்டுகிறார்கள்.
தற்போதும்கூட அவர்கள் உள்ளூர் போட்டிகளில் வியர்வை வழிய விளையாடி வருகிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த அளவுக்கு தீவிரத்தன்மை இல்லாமல் இருக்கிறது.
உள்ளூர் கிரிக்கெட்டில் ரோஹித் நன்றாக விளையாடினால் யாரும் அவரை நீக்கப்போவதில்லை. ஆனால், அந்த ஃபார்ம், ஆர்வம் வேண்டும் என்றார்.