நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு... மனிஷா கொய்ராலா பகிர்ந்த விடியோ!
ரெகுநாதபட்டியில் வட மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே ரெகுநாதபட்டியில் வட மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. வட்ட வடிவத் திடல் நடுவே வடத்தால் கட்டப்பட்ட காளையை ஒவ்வொரு சுற்றிலும் 20 நிமிடங்களில் 9 மாடுபிடி வீரா்கள் கொண்ட குழுவினா் அடக்க வேண்டும் என நிா்ணயம் செய்யப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து மொத்தம் 17 காளைகளும், 153 மாடுபிடி வீரா்களும் களமிறங்கினா்.
ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் விழாக் குழுவினா் சாா்பில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சிங்கம்புணரி,கொட்டாம்பட்டி, பொன்னமராவதி , பிரான்மலை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனா்.