செய்திகள் :

Health: டான்சில் வீக்கம் முதல் கன்ன எலும்புகளில் வலி வரை... சீசனல் பிரச்னைகளை விரட்ட டிப்ஸ்!

post image

மூக்கடைப்பா..?

மூக்கடைப்பா..?

அதிகாலைப் பனியால் சிலருக்கு மூச்சுத் திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.

தொண்டை வறண்டு விட்டதா?

தொண்டை வலி

அடுத்து, இந்த சீசனில் சிறுவர் முதல் பெரியவர் வரை கண்கள் சிவக்க இருமியபடியே இருப்பார்கள். தொண்டை வறண்டு போவதாலும் இருமல் வரும். சளி இருமல் தொல்லையின் அடுத்த கட்டமாகக் குரல்வளையில் வீக்கம் ஏற்பட்டு, அதனால் தொண்டைக் கரகரப்புடன் பேச முடியாத நிலை ஏற்படும். கஷ்டப்பட்டுப் பேசினாலும் காற்றுதான் வரும். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதுடன் அதிகம் பேசுவதையும் தவிர்த்தால் விரைவில் குணமடையலாம்.

வளர்ப்புப்பிராணிகளும் சிகரெட் புகையும்...

செல்லப்பிராணி

குளிர் காலத்தில் தூசி, மகரந்தம் போன்றவற்றின் மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகள் குளிர் காரணமாக வீட்டுக்குள் வந்துவிடும். சிலர் குளிருக்கு அடக்கமாக வீட்டுக்குள் புகைப்பார்கள். அந்தப் புகையும் மற்றவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வாமையால் ஆஸ்துமா வரவும் வாய்ப்பு உண்டு. ஆஸ்துமா வந்துவிட்டால் மீண்டும் மீண்டும் தாக்கும். தனிக் கவனத்துடன் சிகிச்சை எடுத்தால் மட்டுமே நோயின் தீவிரம் குறையும்.

மூக்கில் நீர் வடிதல்!

மூக்கில் நீர் வடிதல்

குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஜலதோஷத்தையும் இருமலையும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்திவிடலாம். மூக்கில் நீர்வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 'நாசில்ஸ் ஸ்பிரே’ உபயோகிக்கலாம். ஆஸ்துமாவுக்கு நவீன சிகிச்சைகளும் இன்ஹேலர்களும் வந்துவிட்டன.

கன்ன எலும்புகளில் வலியா?

sinus

பனிக்காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால் அது சைனசஸாக உருவெடுத்துவிடலாம். மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியன ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; சரிவரப் பேசவும் முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும் போதும் நிமிரும் போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்வதால் வாசனை தெரியாது. ருசியையும் உணர முடியாது.'என்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலம் மூடப்பட்ட சைனஸ் அறைகளைத் திறந்து உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றி சைனஸைக் குணப்படுத்தலாம்.

சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சைனஸ் நோய் வரலாம். எனவே நம் உடம்பை நன்கு கவனித்துக் கொள்வதுடன் நோய்கள் தாக்கும் முன் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அவசியம்.

டான்சில் வீங்கி விட்டதா?

டான்சில்

டான்சில் என்பது நம் வாயின் உள்ளே இருபக்கங்களிலும் உள்ள இயற்கையான சதை. நோய் எதிர்ப்புச் சக்திக்குப் பயன்படுவதால் அதை வாயில் காவலன் என்றுகூடக் குறிப்பிடலாம். உலர்வாக உள்ள வாயினுள் கிருமிகள் அதிக நேரம் தங்குவதால் நோய்த்தொற்று ஏற்பட்டு அப்பகுதி வீங்கி வலியை ஏற்படுத்தும். அறுவை சிகிச்சை இன்றி மாத்திரைகளால் இதைக் குணப்படுத்திவிடலாம்.

காது வலியா?

காது வலி

தொற்றுநோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில் காது சுத்தமாக அடைத்துவிடும். சளியினால் ஏற்படும் சுவாசத் தொற்றுகளின் வழியாகவே காது பாதிப்புக்கு உள்ளாகும். இரவு நேரத்தில் காதில் தீவிர வலி ஏற்படும். சில சமயம் நடுக் காதில் திரவத் தேக்கம் ஏற்பட்டு பாக்டீரியா அதிகமாகப் பெருகும் சூழல் குளிர்காலத்தில் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் வயதானவர்கள் அதிகாலையில் வாக்கிங் போவதைத் தவிர்க்கலாம். அல்லது குளிர் தாக்காத வகையில் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்து நடக்கலாம்.

தொண்டை வலியா?

தொண்டை வலி

நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டு, தொண்டைக் கட்டிக்கொள்ளும். இருமலும், வலியும் உண்டாகி, பேசுவதில் சிரமம் இருக்கும். இது தொடர்ந்தால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

சிலர் தொழில்ரீதியாக நிறையப் பேச வேண்டியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குக் குரலே பிரதானம். அவர்கள் குரலை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அடி வயிற்றில் இருந்து காற்று வருவதைப்போல சுவாசத்தைப் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது; தொண்டையில் இருந்து காற்று வந்தால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் குரல் பிரச்னைகள் குறையும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார் அந்த விவசாயி?

``என் உயிரை விட விவசாயிகளோட வாழ்க்கை தான் முக்கியம்..." இப்படி அவர் கடந்த சனிக்கிழமை உரையாற்றும்போது அவர் உண்ணாவிரதம் தொடங்கி 41 நாள்கள் முடிந்திருந்தது.'விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பலரையும் பாதிக்கும் Brain Aneurysm... மூளை வீக்கத்தின் அறிகுறியாக மாறுமா தலைவலி?

Doctor Vikatan: சமீப காலமாக Brain Aneurysm குறித்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தலைவலி, காய்ச்சல் அறிகுறியுடன்மருத்துவமனையில் சேருவதாகவும், மருத்துவப் பரிசோதனையில் ... மேலும் பார்க்க

Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா பின்னணி என்ன?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ம் ஆண்டு தன் லிபரல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார். அப்போது அவருக்கு வயது 43. அரசியலில் புதிய முகம், இளம் தலைவர், வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ப... மேலும் பார்க்க

Kerala: `வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்' -எம்.எல்.ஏ கைது; போலீஸை விமர்சித்த கோர்ட்.. என்ன நடந்தது?

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத எம்.எல்.ஏகேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் ஆதரவுடன் வெற்றிபெற்று மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பி.வி.அன்வர். இவர் காங்கிரஸ் பாரம்பர்ய கு... மேலும் பார்க்க

Justin Trudeau: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோ... அடுத்த கனடா பிரதமர் யார்?!

2015-ம் ஆண்டு லிபரல் கட்சி சார்பாக கனடா பிரதமராக பதவியேற்ற ஜஸ்டின் ட்ரூடோ 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று அதே பதவியில் தொடர்ந்தார்.ஆனால், 2015-ம் ஆண்டு இருந்த அதே நற்பெயர் அவருக்கு 2021-... மேலும் பார்க்க

தமிழகத்தில் இருவருக்கு HMPV தொற்று உறுதி... எப்படிப் பரவும், என்ன செய்ய வேண்டும்?

பரவும் HMPV தொற்று!ஆண்டுகள் கடந்தாலும் கொரோனா பேரிடர் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்திலிருந்து இன்னும் மக்கள் முழுவதுமாக மீளவே இல்லை. இந்நிலையில், மீண்டும் சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எனப்படும் HM... மேலும் பார்க்க