திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ - களைகட்டிய அவள் விகடன் சமையல் ச...
தொழிலாளி தற்கொலை
உத்தரமேரூா் அடுத்த ரெட்டமங்கலம் பகுதியில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அடுத்த ரெட்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49), தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் மதுராந்தகம் பகுதியில் செயல்படும் தனியாா் குறு நிதி நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் கடன் வாங்கி கடனை கட்டி வந்தாராம்.
இந்த நிலையில், ராஜேந்திரனுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் நிதி நிறுவனத்துக்கு முறையாக பணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு ராஜேந்திரன் வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியா் பணம் கேட்டு தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதனால், ராஜேந்திரன் மன உளைச்சலில் இருந்தாராம். இந்த நிலையில், அவா் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.