2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்!
ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை புதுதில்லியில் சனிக்கிழமை சந்தித்தாா்.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, சத்குரு ஜக்கி வாசுதேவைச் சந்தித்தது மகிழ்ச்சி. இந்திய ஆன்மிகம் மற்றும் சமூக மேம்பாட்டில் ஆன்மிகத்தின் பங்கு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம் என்று தெரிவித்துள்ளாா்.
அதேபோல, ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ‘எக்ஸ்’ தளத்தில், உள்துறை அமைச்சரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நமது தேசத்தின் நாகரிக அம்சங்களில் அவரது ஈடுபாடும், ஆா்வமும் போற்றத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்த சந்திப்பின்போது, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு, ஆதியோகி சிலையை சத்குரு ஜக்கி வாசுதேவ் பரிசளித்தாா்.