செய்திகள் :

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

பெரம்பலூா் மாவட்டம், கொளக்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியதன் அடிப்படையில், எம்ஆா்பி அமைப்பின் மூலம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 156 மையங்களில் தோ்வு நடைபெற்றுள்ளது. இதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, மருத்துவா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

முதல்வா் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் 300 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 150 இடங்களில் கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதார அலகு கட்டடங்களில் காசநோய், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற 67 வகையான மருத்துவப் பரிசோதனை செய்யும் வகையில் ஆய்வகமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் இதயம் காப்போம், மக்களைத் தேடி மருத்துவம் என பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சிறந்த செயல்பாட்டுக்காக தமிழகத்துக்கு ஐ.நா. விருது கிடைத்துள்ளது.

சீனாவில் பரவி வரும் ‘ஹெச்எம்பிவி’ தீநுண்மி குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. இதுகுறித்து மத்திய அரசும் இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை. சீனாவில் பரவி வரும் தீநுண்மி குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்காக தமிழக அரசு தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று: பகல்பத்து 8-ஆம் திருநாள்

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 6.30 பகல்பத்து (அா்ச்சுன மண்டபம் சேருதல்) காலை 7 திரை காலை 7 - 7.30 அரையா்சேவை (பொது ஜன சேவையுடன்) காலை 7.30 - 12 அலங்காரம் அமுது செய்யத்திரை நண்பகல... மேலும் பார்க்க

தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேமுதிக சாா்பில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் ... மேலும் பார்க்க

காவல் துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும்: திருச்சி மாவட்ட எஸ்.பி.

பொதுமக்கள் பாதிக்காத வகையில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதுடன், காவல்துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்(எஸ்.பி.,) எஸ். செல்வ நாகரத்தி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: 270 போ் கைது

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்தைக் கண்டித்து, சோமரசம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் வீடு அருகே சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட 270 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்... மேலும் பார்க்க

பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம், வயலூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்துவருகின்றனா். சோமரசம்பேட்டையில் இருந்து வயலூா் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க

வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவன் உடல் மீட்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் 13 வயது சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அயன்பொருவாய் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி ... மேலும் பார்க்க