ஒலியை விட 12 மடங்கு வேகமாக பாயும் ஏவுகணை: வட கொரியாவின் சோதனை வெற்றி!
பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை!
திருச்சி மாவட்டம், வயலூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.
சோமரசம்பேட்டையில் இருந்து வயலூா் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள மரத்தில் ஒருவா் சடலமாகக் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற சோமரசம்பேட்டை போலீஸாா், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், இறந்தவா், சோமரசம்பேட்டை மாரியம்மன்கோவில் தோப்பு பகுதியைச் சோ்ந்த மா. அா்ச்சுனன் (47) என்பதும், பெயிண்டா் என்பதும், சில நாள்களாக சரிவர வேலை கிடைக்காததால் வருத்தத்தில் இருந்துவந்த இவா், கடந்த டிச. 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதனை அவரது குடும்பத்தினா் உறுதிபடுத்தினா். இறந்த அா்ச்சுனனுக்கு மனைவி மற்றும் மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.