செய்திகள் :

ஒலியை விட 12 மடங்கு வேகமாக பாயும் ஏவுகணை: வட கொரியாவின் சோதனை வெற்றி!

post image

ஒலியை விட 12 மடங்கு அதிக வேகமாகப் பாயும் சுப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் வடகொரியா வெற்றிபெற்றுள்ளது.

வடகொரியா நேற்று (ஜன. 6) ஏவுகணை சோதனை மேற்கொண்டது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ஏவுகணை கிட்டத்தட்ட 1,500 கி.மீ தூரத்திற்கு ஒலியை விட 12 மடங்கு அதிக வேகம் சென்று தாக்கும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

எந்த நாட்டினராலும் பதில் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு ஆயுத கட்டமைப்பை மேம்படுத்துவதாகக் கூறிய கிம், அணு ஆயுத பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஏவுகணையை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | நேபாளம், திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பலி 53 ஆனது!


”பசிபிக் பிராந்தியத்தில் நமது நாட்டை அச்சுறுத்த நினைக்கும் எந்த வகையான எதிரிகளையும் சமாளிக்கு விதமாக இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை தயாராகியுள்ளது” என கிம் பேசியுள்ளார்.

பாலிஸ்டிக் வகை ஏவுகணையான இது அதிக உச்சமாக 99.8 கி.மீ. உயரத்திற்குச் சென்று, பின்னர் 42.5 கி.மி. உயரத்திற்கு வந்து, 1,500 கி.மீ தூரத்தை வெற்றிகரமாகக் கடந்து, கடலில் அமைக்கப்பட்டிருந்த அதன் இலக்கை சரியாகத் தாக்கியதாக வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.


வட கொரியா கடந்த இரண்டு மாதங்களில் முதல் முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வருகிற ஜனவரி 20 அன்று அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருப்பதைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க | மெக்காவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


அந்த ஏவுகணை கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல்பகுதியில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது 1,100 கி.மீ. தொலைவு மட்டுமே சென்றதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், வடகொரியா இதை மிகைப்படுத்துகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகத் தனது பலத்தை காட்ட முயன்றிருக்கலாம் என்றும் தென் கொரிய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கனடாவின் அடுத்த பிரதமர் ஒரு தமிழ்ப் பெண்!! யார் இவர்?

கனடாவின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 57) தேர்வாக வாய்ப்புள்ளது.தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர்,... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா

வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, நாடு நடத்துமாறு வங்கதேசத்திலிருந்து வலியுறுத்தப்படும் நிலையில், அவரது விசா காலத்தை இந்தியா நீட்டித்துள்ளது. மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறக்கும்! ஏன்?

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந... மேலும் பார்க்க

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை: ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக ஏ... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலஸின் மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிற... மேலும் பார்க்க

நம்பகத்தன்மையான உறவை இந்தியா-அமெரிக்கா மேம்படுத்துவது அவசியம்: அமெரிக்க வெள்ளை மாளிகை

‘முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய கண்டுபிடிப்புத் தளங்களை உருவாக்குவதில் நம்பகத்தன்மையான உறவை இந்தியா-அமெரிக்கா மேம்படுத்துவது அவசியம்’ என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுற... மேலும் பார்க்க