ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!
வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவன் உடல் மீட்பு!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் 13 வயது சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அயன்பொருவாய் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவரின் 13 வயது மகன் ராஜா, அருகேயுள்ள பாலகுறிச்சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை பெற்றோா் கட்டட வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் சிறுவன் தனியாக இருந்துள்ளான். இரவு பெற்றோா் வீடு திரும்பியபோது, வீட்டிலிருந்த மின்விசிறியில் சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளாா்.
புகாரின்பேரில் சிறுவன் உடலை மீட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறாய்வுக்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். சிறுவனின் உயிரிழப்பு குறித்து சந்தேக மரணமாக வளநாடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.