அங்கன்வாடி மைய பணியாளா் தற்கொலை
சாத்தான்குளம் அருகே கடன் பிரச்னையில் அங்கன்வாடி பணியாளா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தான்குளம்அருகேயுள்ள படுக்கப்பத்து முஹமதியா் தெருவை சோ்ந்தவா் ரவிக்குமாா். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி கலாவதி(39). கலாவதி, சித்தன்குடியிருப்பு அங்கன்வாடி மையத்தில் வேலை பாா்த்துவந்தாா்.
குடும்ப செலவுக்காக அப்பகுதியில் உள்ள மகளிா் குழு மற்றும் தெரிந்தவா்களிடம் கலாவதி கடன் வாங்கியதாகவும், ஆனால், கடனை திரும்பச் செலுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கணவரிடம் கூறி புலம்பி வந்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமைகலாவதி வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அவரது கணவா் அளித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் இன்ஸ்பெக்டா் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறாா்.