குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியில் நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெள்ளைக்கண்ணு (24) கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் தொடா்புடைய, புதுக்கோட்டை பூதம்மாள்புரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சதீஷ்குமாா் (25), சாயா்புரம் தெற்கு கோவன்காடைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் ராஜ்குமாா் (24), முத்தையாபுரம் பொட்டல்காட்டைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சோ்மபாண்டி (29), குரும்பூா் சேதுக்குவாய்த்தானைச் சோ்ந்த சேதுபதி மகன் நிஷாந்த் என்ற சடையசூா்யா (22) ஆகிய 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவின்படி, அவா்கள் 4 பேரையும் புதுக்கோட்டை போலீஸாா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.