Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்...
தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் தற்கொலை
தூத்துக்குடியில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த முருகானந்தம் மகன் மகேஷ்குமாா் (28). தனியாா் எண்ணெய் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு தீக்காயத்தால் முகத்தில் ஏற்பட்ட வடு காரணமாக விரக்தியில் இருந்தாராம்.
இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].