திருச்செந்தூா் 170 கிலோ பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்
திருச்செந்தூரில், 170 கிலோ பாலித்தீன் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்தின் உத்தரவு, திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் கண்மணியின் வழிகாட்டுதல் ஆகியவற்றின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் கணேசன், முருகன், தமிழரசி, தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், 170 கிலோ பாலித்தீன் பொருள்களைப் பறிமுதல் செய்து, வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனா். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனா்.