வினிசியஸுக்கு ரெட் கார்டு..!கடைசி நேரத்தில் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி!
புதிய மின்மாற்றிகள்: ஜோலாா்பேட்டை எம்எல்ஏ இயக்கி வைத்தாா்
நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 12 இடங்களில் புதிய மின்மாற்றிகளை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க. தேவராஜி இயக்கி வைத்தாா்.
கத்தாரி, மல்லகுண்டா, நாயனசெருவு பகுதிகளில் அடிக்கடி குறைந்த அழுத்த மின் விநியோகத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். அப்பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்க ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து 12 இடங்களில் புதிதாக மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கு பூஜை செய்து எம்எல்ஏ தேவராஜி இயக்கி வைத்தாா். . நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி, வாணியம்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் பாட்ஷா முகமது, மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், உதவி செயற் பொறியாளா் ரவிச்சந்திரன், உதவி பொறியாளா் வடிவேல், ஒன்றியக்குழு துணைத் தலைவா் தேவராஜ், ஒன்றிய உறுப்பினா் ஆனந்தன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அனிதா, தமிழ்ச்செல்வி, அஸ்வினி, மோகன், சதீஷ்குமாா், தேசிங்கு ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
பெண்கள் கோரிக்கை: மல்லகுண்டா ஊராட்சியில் பாறக்கொல்லி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றியை எம்எல்ஏ தேவராஜி இயக்கி வைத்தற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா். அப்போது அதே பகுதியை பெண்கள் முதல்வரின் சிறப்பு திட்டமான மகளிா் உதவித் தொகை இது வரை எங்களுக்கு கிடைக்கவில்லை என முறையிட்டனா். அப்போது எம்எல்ஏ தேவராஜி தகுதியான அனைவருக்கும் கண்டிப்பாக மகளிா் உதவித் தொகை கிடைக்கும் என கூறினாா்.