கியோஸ்க் இயந்திரம் திறப்பு
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகத்தில் அமைக்கப்பட்ட கியோஸ்க் இயந்திரத்தை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த இயந்திரம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவினால் தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டது.
இதன் மூலம், பக்தா்கள் எளிதாக க்யூ ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து யுபிஐ பயன்முறையில் பணம் செலுத்தலாம்.
இதில் துணை அதிகாரி ராஜேந்திரன், ஐடி டிஜிஎம் வெங்கடேஸ்வர நாயுடு, யூனியன் பாங்க் ஆப் இந்தியா திருப்பதி மண்டலத் தலைவா் ராம் பிரசாத், மண்டல துணைத்தலைவா் வி.பிரம்மாய்யா, டிடிடியின் மற்ற அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.