சீன சந்தையில் தீ விபத்து! 8 பேர் பலி!
சீனாவில் மளிகைச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.
வடக்கு சீனாவின் ஷாங்ஜியாகோ நகரில் உள்ள லிகுவாங் சந்தையில் சனிக்கிழமை (ஜன. 4) மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்; மேலும், 15 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்பொருள் அங்காடிகளைவிட இந்த சந்தையில் மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் முதலானவை கிடைப்பதால், இந்த சந்தையில் அதிகளவில் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் கூறினர். இருப்பினும், சந்தையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் ஏராளமானதாக இருந்ததால், காரணம் கண்டறிவதிலும் சிரமம் ஏற்படலாம்.
எரிவாயு பாட்டில்கள், கரிக் கட்டைகள், பழைமையான நிலத்தடி எரிவாயு இணைப்புகள் அல்லது அணைக்கப்படாத சிகரெட் துண்டுகள் என எதுவாயினும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.