பிக் பாஸ் 8: செளந்தர்யா வெற்றி பெற ரவீந்திரன் உழைக்கிறாரா?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யா வெற்றி பெற, சமூக வலைதளங்களில் மக்கள் தொடர்புக் குழு செயல்படுவதாக சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிக் பாஸ் போட்டி குறித்து நன்கு அறிந்த ரவீந்திரன், செளந்தர்யாவின் வெற்றிக்காக உழைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக நடிகர் வி.ஜே. விஷால் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் ராணவ், மஞ்சரி வெளியேறிய நிலையில் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ளனர். பிக் பாஸ் முடிய இன்னும் இரு வாரங்களே உள்ளதால், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிக் பாச் வீட்டில் 92வது நாளான இன்று காலையில் பிக் பாஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே மக்கள் தொடர்பு துறை வைத்து வெற்றிக்காக செயல்படுவது யார்? எனக் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு போட்டியாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்படி செளந்தர்யாவின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக மக்கள் தொடர்புத் துறை செயல்படுவதாக வி.ஜே. விஷால் குறிப்பிட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரவீந்திரன் செளந்தர்யாவுக்காக செயல்படுவதாகவும் சந்தேகத்துடன் கூறினார்.
முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின் ஆகியோரும் செளந்தர்யாவுக்கு ஆதரவான குழு செயல்படுவதாகக் கூறினர்.
இதேபோன்று அருண் பிரசாத்தும் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ளதால், அவரைப் பரப்புவதற்காக தனிக் குழு செயல்படுவதாக ஜாக்குலின், தீபக் ஆகியோர் குறிப்பிட்டனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வெளியேறிய பிறகு வர்ஷினியை சந்தித்த ராணவ்!