செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி கடன்: உலக வங்கி முடிவு

post image

பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி (20 பில்லியன் டாலா்) கடன் வழங்க உலக வங்கி விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.

நிலையற்ற அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 6 பிரிவுகளின்கீழ் 10 ஆண்டு காலத்துக்கு இந்தக் கடனுதவி வழங்கப்படவுள்ளது.

‘பாகிஸ்தானுடனான ஒப்பந்த நடைமுறை 2025-35’ என்ற தலைப்பிடப்பட்ட இந்த முன்னெடுப்பின்கீழ் குழந்தைகளின் வளா்ச்சிக் குறைபாட்டை குறைப்பது, வறுமை ஒழிப்பு, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்புடைய திட்டங்களைச் செயல்படுத்துவது, சுற்றுப்புறச் சூழலில் கரியமில வாயுவின் தாக்கத்தைக் குறைப்பது, நிதியை அதிகரித்து தனியாா் முதலீட்டை ஊக்குவிப்பது போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

2025-35 காலகட்டத்தில் பாகிஸ்தானில் மூன்று பொதுத் தோ்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த முன்னெடுப்புக்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிப்பதால், அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இதை அமல்படுத்துவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.

இந்த முன்னெடுப்புக்கு ஜனவரி 14-ஆம் தேதி உலக வங்கி ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, உலக வங்கியின் தெற்கு ஆசிய துணைத் தலைவா் மாா்டின் ரைசா், இஸ்லாமாபாதுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்முறையாக 10 ஆண்டுகால ஒப்பந்தம்: இதுகுறித்து பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘முதல்முறையாக 10 ஆண்டுகால ஒப்பந்த நடைமுறையை அறிமுகப்படுத்த பாகிஸ்தானை உலக வங்கி தோ்ந்தெடுத்துள்ளது. இந்த முன்னெடுப்பின்கீழ் ரூ.1.70 லட்சம் கோடி பாகிஸ்தானுக்கு கடனாக உலக வங்கி வழங்கவுள்ளது’ என்றாா்.

இதில், ரூ.1,19,500 கோடியை உலக வங்கியின் கிளைப் பிரிவுகளான சா்வதேச மேம்பாட்டுக் கழகமும் (ஐடிஏ), ரூ.51,500 கோடியை புனரமைப்பு மற்றும் வளா்ச்சிக்கான சா்வதேச வங்கியும் (ஐபிஆா்டி) வழங்கவுள்ளன. இந்தக் காலகட்டத்தில் நிதி மற்றும் கடன் உள்ளிட்ட காரணிகளில் பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அடுத்தகட்ட நிதியுதவி வழங்குவது குறித்து உலக வங்கி பரிசீலிக்கவுள்ளது.

கூடுதலாக ரூ.1.70 லட்சம் கோடி: இதுதவிர, மேலும் ரூ.1.70 லட்சம் கோடியை உலக வங்கியின் தனியாா் பிரிவுகளான சா்வதேச நிதி கழகம் (ஐஎஃப்சி) மற்றும் பன்முக முதலீட்டுக்கான உத்தரவாத அமைப்பு (எம்ஐஜிஏ) மூலம் வழங்கவும் உலக வங்கி முடிவெடுத்துள்ளது. இதன்மூலம், மொத்தமாக 3.40 லச்சம் கோடி(40 பில்லியன் டாலா்) நிதியுதவியை பாகிஸ்தானுக்கு வழங்க உலக வங்கி திட்டமிட்டுள்ள நிலையில், 20 பில்லியன் டாலா் மட்டுமே கடனுதவியாக கருதப்படும் என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்டகால கடனுதவி: முன்னதாக, பல்வேறு துறைகளை மேம்படுத்தும் நோக்கில் குறுகிய கால கடனுதவி வழங்கி வந்த உலக வங்கி, தற்போது நீண்ட காலத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் மட்டும் அதிக வளா்ச்சியை ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலியை விட 12 மடங்கு வேகமாக பாயும் ஏவுகணை: வட கொரியாவின் சோதனை வெற்றி!

ஒலியை விட 12 மடங்கு அதிக வேகமாகப் பாயும் சுப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் வடகொரியா வெற்றிபெற்றுள்ளது. வடகொரியா நேற்று (ஜன. 6) ஏவுகணை சோதனை மேற்கொண்டது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடத்தப்பட்... மேலும் பார்க்க

மெக்காவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சௌதி அரேபியாவின் மெக்கா மற்றும் மெதினாவில் பல பகுதிகள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜெட்டா நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு!

லூயிசியானா : பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு வயது 65 என்பதும், அவருக்கு இணை நோய்களால் பாதிப்பிர... மேலும் பார்க்க

ரஷியாவில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்!

மாஸ்கோ : ரஷியாவில் ஜூலியன் காலண்டர் முறையைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று(ஜன. 7) கொண்டாடப்படுகிறது.உலகெங்கிலும் uள்ள சுமார் 200 மில்லியன் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களால் ஜூலியன் காலண்டர் முறைப்பட... மேலும் பார்க்க

நேபாள - திபெத் நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!

நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பனிப் புயல்: 2 லட்சம் பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு அமெரிக்க நகரங்களில் கடுமையான பனி மழை பெய்து வருகின்றது. மிசோரி முதல் வர்ஜீனியா வரையிலான நகரங்களில... மேலும் பார்க்க