நேபாள - திபெத் நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!
நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது சீனாவில் திபெத் பகுதிகள், இந்தியாவில் பிகார், தில்லி மற்றும் வட மாநிலங்களில் உணரப்பட்டது.