17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் கண்டுபிடிப்பு!
நாத்தனாரைக் கொடுமைப்படுத்திய ஹன்சிகா? வழக்குப்பதிவு!
நடிகை ஹன்சிகா மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை ஹன்சிகா தமிழில், ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை 2022-ல் ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிக்க: ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் கங்குவா!
ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாள்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி விண்ணப்பம் அளித்தார்.
பிரசாந்த் மோத்வானியும் அவரது மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், ஹன்சிகா மற்றும் அவரின் அம்மா மோனா மோத்வானி இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்தவதாகவும் கணவருடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்தும் அதற்குத் தடையாக இருக்கிறார்கள் என முஸ்கான் மும்பை அம்பாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர், ஹன்சிகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.